Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் - 623526, இராமநாதபுரம் .
Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram - 623526, Ramanathapuram District [TM035671]
×
Temple History

தல வரலாறு

வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருத்தலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை ஒரு துறவியின் பராமரிப்பில் இருந்து வந்தது. அதன் பின் கி.பி. பன்னிரெண்டாம் நுற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரமபாகு என்பவர் இத்திருக்கோயில் கருவறையைக் கட்டியுள்ளார், பதினைந்தாம் நூற்றாண்டில் இராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரைச் சேர்ந்த ஒரு வைசியரும் மேற்கு கோபுரம் மற்றும் மதில் சுவர்களை கட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் திருப்பணிகளைச் செய்துள்ளார். பதினாறாம் நூற்றாண்டில் மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கனின் கீழ் குறுநில மன்னராக இருந்த சின்னஉடையான் சேதுபதி கட்டத்தேவர் என்பவர் நந்தி மண்டபத்தையும் மற்றும் சில திருப்பணிகளையும் செய்துள்ளார். சிறப்பு மிக்க இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் நந்தி...

தல பெருமை

ஸ்ரீஇராமபிரான் இராவணனை வதம் செய்ததால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க, அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்கு சீதை, இலட்சுமணனுடன் வந்து, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை விளையாட்டாக மண்ணைக் கையில் பிடித்துச் செய்த சிவலிங்கத்தையே நல்ல நேரம் முடிவதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. கைலாசத்திலிருந்து திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை சாந்தப்படுத்த இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கத்தை...

இலக்கிய பின்புலம்

கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம், வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு தேடி மால் செய்த கோயில் திரு இராமேசுவரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகும் அன்றே என அப்பர் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) பதிகம் பாடி வணங்கி போற்றும் இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருஞானசம்பந்தராலும் பாடல் பெற்றதாகும். மேலும், அருணகிரிநாதர், தாயுமானவர், முத்துச்சாமி தீட்சிதர் எனப் பல அருளாளர்கள் போற்றி பாடியுள்ளனர். இந்தியத் திருநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் இராமேசுவரம் பழமையும், பெருமையும் வாய்ந்த திருத்தலமாகும். மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய முப்பெருமைகளையும் கொண்ட புண்ணியத் தலமாகும். இராமேசுவரம் இந்திய ஒருமைப்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்கிறது. இந்தியத் திருநாட்டில் உள்ள புண்ணியத் திருத்தலங்கள் நான்கில்...