தமிழ்நாடு மாநிலம், இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் நகரில் இராமேசுவரம் தீவில் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில், திருமாலின் கையில் உள்ள சங்கைப் போன்ற வடிவைக் கொண்ட இராமேசுவரம் என்ற தீவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் எழிலோடு அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது ஸ்ரீஇராமபிரான் இராவணனைக் கொன்றதால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவம் நீங்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்குச் சீதை, இலட்சுமணனுடன் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு...
04:00 AM IST - 01:00 PM IST | |
03:00 PM IST - 09:00 PM IST | |
இத்திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும், காலை 5.00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் காலை 5.00 மணி முதல் 5.45 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும் காலை 6.00 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும். மதியம் 3.00மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3.15 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் |