மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சிறப்புத் திட்டமான திருக்கோயில்களில் அன்னதானத்திட்டம் நடைபெற்று வருகிறது. 2002-ஆம் ஆண்டு முதல் இத்திருக்கோயில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு மனநிறைவும் பசி நிறைவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான அன்னதானத் திட்டம் 2004-ம் ஆண்டிலிருந்து இத்திருக்கோயிலில் நடைபெற்று வந்தது. இத்திட்டத்தில் சுமார் 250 நபர்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் தற்போது மாண்புமிகு முதல்வர் அவர்களால் இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் முப்பொழுதும் அன்னதானம் என்ற திட்டம் 31.12.2022 முதல் தொடங்கப் பட்டுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 1500 பக்தர்களிலிருந்து 3000 பக்தர்கள் வரை பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூன்று வேளைகளாகப் பிரிக்கப்பட்டு சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல் என முப்பொழுதும் அன்னதானம் பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப் பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் சுமார் 180 பக்தர்கள் அமர்ந்து அன்னதானத்தில் பயன்பெறும் வகையில் அன்னதானக் கூடம் சிறப்பாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேற்படி முப்பொழுதும் அன்னதானத்திட்டத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புவர்கள் இத்திருக்கோயிலின் அன்னதான வங்கிக் கணக்கான 492635495 என்ற எண்ணிற்கு நன்கொடைத் தொகையை செலுத்தலாம். மேலும் நன்கொடையாளர்கள் ரூ.1,60,000/-க்கு மேல் நன்கொடையாக வழங்கினால், அத்தொகை வங்கியில் நிரந்தர முதலீடு செய்யப்பட்டு அதற்கு கிடைக்கும் வட்டிக்தொகையிலிருந்து அந்த நன்கொடையாளர் வருடத்தில் ஒரு நாள் மட்டும் தங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கலாம்.